இந்தியா

இந்தியாவில் 180+ நாட்கள் தங்கும் வெளிநாட்டினருக்கான பதிவு விதிகளில் மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 180 நாட்​களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்​பும் வெளி​நாட்​டுப் பிரஜைகளுக்​கான பதிவு விதி​களில் மத்திய அரசு மாற்​றம் செய்​துள்​ளது.

இதன்​படி, 180 நாட்​கள் தங்​கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்​வதற்கு பதிலாக, அவர்​கள் அதற்கு முன்பே தங்​களை பதிவு செய்து கொள்​வது இனி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

மாற்​றப்​பட்ட விதி​களின்​படி, 180 நாட்​கள் அல்​லது அதற்​கும் குறை​வான கால அவகாசம் கொண்ட விசாக்​களில் இந்திய வரு​வோர், அனு​மதி காலத்தை நீட்​டிக்க விரும்​பி​னால், அவர்​கள் 180 நாள் வரம்பு முடிவடைவதற்கு முன் எப்​போது வேண்​டு​மா​னாலும் தங்​களைப் பதிவு செய்து கொள்​ளலாம்.

இந்த மாற்​றங்​கள் குடியேற்​றம் மற்​றும் வெளி​நாட்​டினர் விதி​கள் 2025-ல் செய்​யப்​பட்ட திருத்​தங்​கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்​தியா வந்​திறங்​கிய​தில் இருந்து 180 நாட்​கள் முடிந்த பிறகு, அடுத்த 14 நாட்​களுக்​குள் பதிவு செய்ய வேண்​டும் என்ற முந்​தைய நடை​முறைக்கு மாற்​றாக இந்த புதிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கூடு​தலாக, இந்த திருத்​தப்​பட்ட விதி​கள் 180 நாட்​களுக்கு மேல் செல்​லுபடி​யாகும் விசாக்​களை வைத்​திருப்​போருக்​கும் பொருந்​தக் கூடியது.

SCROLL FOR NEXT