இந்தியா

படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு சந்திரபாபு நாயுடு இரங்கல்

2 பேரைத் தேடும் பணி தீவிரம்

என். மகேஷ்குமார்

அமராவதி: சென்னை காசிமேட்​டைச் சேர்ந்த 9 மீனவர்​கள் கடந்த 29-ம் தேதி மீன்​பி​டிக்​கக் கடலுக்​குச் சென்​றனர். ஆந்​திர மாநிலம், பிரகாசம் மாவட்​டம், கொத்​தப்​பட்​டினம் பகுதி​யில் ஆழ்கடலில் மீன்​பி​டித்​துக் கொண்​டிருந்​த​போது, முரசு புயலின் பலத்த சூறாவளிக் காற்​றால் இவர்​களது படகு எதிர்​பாராத​வித​மாகக் கவிழ்ந்​தது. 9 மீனவர்​களும் கடல் சுழலில் அடித்​துச் செல்லப்பட்டனர்.

இவர்​களில் 5 பேரின் உடல்​கள் கொத்​தப்​பட்​டினம் கடற்​கரையில் ஒதுங்​கின. இதையடுத்து, ஆந்​திரக் கடலோரக் காவல் படை​யினரும் தமிழக மீன்​வளத்​துறை அதி​காரி​களும் மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​தத் தகவலை அறிந்த முதல்​வர் சந்​திர​பாபு நாயுடுவும், துணை முதல்​வர் பவன் கல்​யாணும், உள்​துறை அமைச்​சர் அனிதாவை உடனடி​யாகச் சம்​பவ இடத்​துக்கு அனுப்பி வைத்​தனர்.

தேடும் பணி​யையும் முடுக்​கி​விட்​டனர். இதில், 2 பேரின் உடல்​கள் நேற்று கிடைத்​த​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது. மீதமுள்ள 2 பேரைத் தேடும்பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. உயி​ரிழந்த மீனவர்களின் குடும்​பத்​தினருக்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடுவும், துணைமுதல்​வர் பவன் கல்​யாணும் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT