பிரதமர் திறந்து வைத்த பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம் இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தகவல்
பிரதமர் திறந்து வைத்த பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம் இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும்
Updated on: 
1 min read

தூத்துக்குடி: இந்​தி​யாவின் முதல் பசுமை மெத்​த​னால் எரிபொருள் நிரப்​பும் மையம், இம்​மாத இறுதிக்​குள் சேவையைத் தொடங்​கும் என தூத்​துக்​குடி வ.உ.சி. துறைமுக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக துறைமுக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித் கூறி​யிருப்​ப​தாவது: வ.உ.சிதம்​பரனார் துறைமுகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்​தி​யாவின் முதல் பசுமை மெத்​த​னால் எரிபொருள் நிரப்​பும் மையத்தை பிரதமர் நரேந்​திர மோடி அக்​டோபர் 11-ம் தேதி திறந்து வைத்​தார்.

சர்​வ​தேச கப்​பல் நிறு​வனங்​கள், மெத்​த​னால் எரிபொருளில் இயங்​கும் கப்​பல்​களின் எண்​ணிக்​கையை அதி​கரித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இத்​துறை​யில் வளர்ந்​து​வரும் புதிய சந்​தையில் வ.உ.சிதம்​பரனார் துறைமுகமும் தனது பங்​களிப்பை விரிவுபடுத்​து​வதற்​கான வாய்ப்பை இதன்​மூலம் பெற்​றுள்​ளது.

இச்​சேவை தொடங்​கப்​படும்​போது, இந்​தி​யாவின் கிழக்​குக் கடற்​கரையில் பசுமை மெத்​த​னால் எரிபொருள் நிரப்​பும் சேவையை வழங்​கும் ஒரே துறைமுக​மாக வ.உ.சிதம்​பரனார் துறைமுகம் திகழும். இந்த சேவை​யில் தலா 750 கன மீட்​டர் கொள்​ளளவு கொண்ட இரண்டு சேமிப்​புத் தொட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சாலை வழி​யாக டேங்​கர் லாரி​கள் அல்​லது கப்​பல்​கள் மூலம் கொண்​டு வரப்​படும் மெத்​த​னாலை சேமிப்​புத் தொட்​டிகளில் இருந்து கப்​பல்​களுக்கு எரிபொருளாக வழங்​கும் வகை​யில், சேமிப்​புப் பகுதி​யையும், கப்​பல்​களுக்கு எரிபொருள் நிரப்​பும் துறைமுகத் தளத்​தையும் இணைத்து 2.8 கிலோ மீட்​டர் நீளமுள்ள குழாய் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இச்​சேவையைத் தொடங்​கு​வதற்கு தேவை​யான பாது​காப்பு ஏற்​பாடுகள், சட்​டபூர்வ நடைமுறைகள் மற்​றும் செயல்​பாட்​டுக்​கான முன்​னேற்​பாடுகள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இச்​சேவையை நடத்​து​வதற்கு பொருத்​த​மான நிறு​வனத்தை தேர்வு செய்ய விருப்​பம் தெரி​விக்​கும் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இம்​மாத இறுதிக்​குள் கப்​பல்​களுக்கு பசுமை மெத்​த​னால் எரிபொருள் வழங்​கும் சேவை தொடங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

பிரதமர் திறந்து வைத்த பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம் இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும்
“கோவை பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகாக மாற்றியதே திமுகதான்” - முதல்வர் விஜய்

X