இந்தியா

எஃப்சிஆர்ஏ மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மத்திய அரசு பரிந்துரை

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்​சிஆர்ஏ மசோ​தாவை நாடாளுமன்ற கூட்​டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்புவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று முன்மொழிந்தது.

இது தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிவார் என மக்களவையின் துணை அலுவல் பட்டியல் தெரிவிக்கிறது.

இது குறித்து மக்களவையின் அலுவல் பட்டியலில் இன்று வெளியான அறிவிப்பில், ‘வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா (எப்​சிஆர்ஏ), மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படவுள்ள இந்த அவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் தலைவரால் நியமிக்கப்படவுள்ள மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு அவைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை, அக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். இக்குழு 2026-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் இச்சபைக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மற்றபடி, நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பான இந்த அவையின் நடைமுறை மற்றும் அலுவல் விதிகள், சபாநாயகர் செய்யும் மாறுபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் பொருந்தும். மேலும், மாநிலங்களவை அந்தக் கூட்டுக் குழுவில் இணைந்து, அக்குழுவுக்கு மாநிலங்களவையால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த அவை மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கிறது’ என்று அலுவல் பட்டியல் கூறுகிறது.

ஜூலை 20 டெல்லி மாணவர் போராட்டத்தின்போது காவல் துறையின் நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சிகள் பதில் கோரியதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்றத்தில் அமளி நிலவியது. மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

வெளி​நாடு​களில் இருந்து இந்​திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்​பப்​படும் நன்​கொடைகளை வரன்​முறைப்​படுத்த வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா (எஃப்​சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவை நடப்பு மழைக்​கால கூட்​டத் தொடரில் நிறைவேற்ற மத்​திய அரசு முனைப்பு காட்​டியது.

ஆனால் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், எஃப்​சிஆர்ஏ மசோ​தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. ஆளும் பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் வடகிழக்கு மாநிலங்​களை சேர்ந்த சில கட்​சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தி உள்ளன.

SCROLL FOR NEXT