இந்தியா

‘நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு’ - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கவுல் புத்தகத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதி​யுள்ள சுயசரிதை புத்​தகத்​தில் நீதிப​தி​கள் நியமனத்தில் மத்​திய அரசின் தலை​யீடு இருந்​த​தாக கூறியது பெரும் புயலைக் கிளப்​பியுள்​ளது.

உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சஞ்​சய் கிஷன் கவுல் ‘விதவுட் ஃபியர் ஆர் ஃபேவர்’ (Without Fear or Favour) எனும் புத்​தகத்தை எழுதி​யுள்​ளார். இன்​னும் வெளியாகாத அந்த சுயசரிதை புத்தகத்தை மேற்​கோள் காட்டி சில தகவல்​கள் வெளியாகி உள்ளன. அதில், கொலீஜியம் கூட்​டம் நடை​பெறு​வதற்கு முன்பே நீதிப​தி​கள் நியமனம் குறித்து மத்​திய அரசிடம் ஒப்​புதல் பெற முயன்​றது, சிறு​பான்​மையின சமுதாயத்​தைச் சேர்ந்த நீதிபதி ஒரு​வரின் சாதி குறித்து அரசு கேள்வி எழுப்​பியது உள்​ளிட்ட பல்​வேறு சம்பவங்களை நீதிபதி கவுல் சுட்​டிக்​காட்​டி​யிருப்​பது அரசி​யல் வட்டாரத்​தில் புயலை கிளப்​பியுள்​ளது.

இது​குறித்து காங்​கிரஸ் ஊடகப் பிரிவுப் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பக்​கத்​தில் கூறியுள்​ள​தாவது: இது​வரை பலர் வெளிப்​படை​யாகப் பேசத் தயங்​கிய விஷயங்​களை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இப்​போது ஆதா​ரப்​பூர்​வ​மாக வெளிக்​கொண்டு வந்​துள்​ளார்.

நீதிப​தி​கள் நியமனத்​துக்கு முன் அரசுடன் பேச்சு​வார்த்தை நடந்ததை முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்​திரசூட் மறுக்​க​வில்லை என்​பது இங்கு கவனிக்​கத்​தக்​கது.

அரசின் தலை​யீட்டை முன்​னாள் தலைமை நீதிப​தியே ஒப்​புக்​கொள்​ளும்​போது, நீதித்​துறை​யின் சுதந்​திரம் எந்த அளவுக்​குப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது என்ற கவலை மேலும் ஆழமாக எழுகிறது. பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் (பிஎம்​எல்ஏ) கீழ் தொடுக்​கப்​பட்ட வழக்கு ஒன்றை நீதிபதி கவுல் தலை​மையி​லான அமர்வு விசாரித்த​போது, முந்​தைய தீர்ப்​பின் சில பகுதி​களை மறு​பரிசீலனை செய்ய நேரிடும் எனக் குறிப்​பிட்​டது.

அதன் பிறகு, நீதிபதி கவுலின் ஆலோ​சனையைப் பெறாமலேயே அந்த வழக்கு வேறு அமர்​வுக்கு மாற்​றப்​பட்​ட​தாக அவர் புத்தகத்தில் குறிப்​பிட்​டுள்​ளார். உச்ச நீதி​மன்​றத்​தின் அன்​றாட செயல்​பாடுகளி​லேயே மத்​திய அரசு எந்த அளவுக்​குத் தலையிடுகிறது என்​ப​தற்கு இதுவே சான்று. அரசி​யலமைப்​பைப் பாது​காக்​கும் ஒரு அமைப்பு, அதி​காரத்​தில் இருப்​பவர்​களின் அழுத்​தத்​துக்கு அப்​பாற்​பட்டு இயங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT