இந்தியா

டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க ‘சாட்பாட்' வசதியை தொங்கும் சிபிஐ

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2021 ஏப்​ரல் முதல் 2025 நவம்​பர் வரை நாடு முழு​வதும் டிஜிட்​டல் கைது உட்பட சைபர் மோசடியால் பொது​மக்​கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியைத் தடுக்க சிபிஐ சார்​பில் அபய் என்ற பெயரில் ‘சாட்பாட்' வசதி தொடங்கப்படவுள்ளது.

டெல்​லி​யில் இன்று நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் ‘சாட்​பாட்' வசதியை தொடங்கி வைக்க உள்​ளார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறிய​தாவது: சிபிஐ அமைப்​பின் சாட்​பாட் ​மூலம் பொது​மக்​கள் தரப்​பில் எழுப்பப்​படும் சந்தேகங்களுக்கு தெளி​வான பதில் அளிக்கப்​படும்.

உதா​ரண​மாக மர்ம நபர், யாரை​யா​வது டிஜிட்​டல் கைது செய்​திருப்​ப​தாக மொபைல் போனில் மிரட்​டல் விடுத்​தால், உடனடி​யாக அபய் சாட்​பாட் வசதியை பயன்​படுத்​தலாம். மர்ம நபர் ஏதாவது ஒரு விவ​காரத்தைக் கூறி மிரட்​டல் விடுப்​பது வழக்​கம். அது குறித்து சாட்​பாட்​டில் கேள்வி எழுப்பி தெளி​வான விளக்​கத்​தைப் பெறலாம். உச்ச நீதி​மன்​ற அறி​வுறுத்​தலின்​படி சாட்​பாட் வசதியை தொடங்குகிறோம். இவ்​வாறு சிபிஐ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

SCROLL FOR NEXT