மலப்புரம்: கேரள மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான ஜமீலா என்பவர் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சையது அலி மஜீத் மீது புகார் அளித்தார்.
கோடக்கல்லில் இவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் சையது மீது பிஎன்எஸ் 351 (3) (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 79 (பெண்களின் கண்ணியத்துக்கு பங்கம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.