

புதுடெல்லி: மாசு கட்டுப்பாடு சான்று இல்லாவிட்டால் நாளை முதல் பெட்ரோல் வழங்கப்படாது என டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிரஸா நேற்று கூறியதாவது: டெல்லியில் காற்று மாசு அளவு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பாஜக அரசு அமைந்த பிறகு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, மாசு கட்டுப்பாடு சான்று இல்லாவிட்டால் 18-ம் தேதி (நாளை) முதல் பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் வாகன உரிமையாளர்கள் அனைவரும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.