இந்தியா

நீட் மறு தேர்வுக்கு எதிரான மனுக்கள் மீது ஜூலையில் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை வினாத்தாள் கசிவு புகார்களை தொடர்ந்து தேசிய தேர்வுகள் முகமை ரத்து செய்தது. மறு தேர்வு ஜூன் 21ல் நடைபெவுள்ளது.

இந்த மறு தேர்வை அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி டெல்லியை சேர்ந்த மங்கலா கோலி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி.மோகனா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி கோடைகால விடுமுறைக்கு பிறகு ஜூலையில் தொடங்கும் வழக்கமான விசாரணையின்போது நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் மறுதேர்வு நடைபெறும் ஜூன் 22 வரை டெலி கிராம் செயலிக்கு மத்திய அரசுத் தடை விதித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலி கிராம் செயலி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேஜஸ் கரியா, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT