படம்: ஏஐ

இந்தியா

கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி மதிப்பு நகை திருட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நகை வியாபாரியும், எஸ்.கே.ஜி. குந்தன் கிராஃப்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கன்னைய்யா லால், மார்க்கெட்டிங் தொடர்பான பணிக்காக கடந்த 18-ம் தேதி தனது மகன் துருவ் சோனி மற்றும் ஊழியர் ஒருவருடன் டெல்லிக்கு வந்துள்ளார்.

அவர்கள் கொண்டு வந்த 3 பைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. மறுநாள் 19-ம் தேதி கரோல் பாக் ஆர்ய சமாஜ் சாலையில் தனது காரை நிறுத்தி விட்டு உணவகத்துக்கு சென்றார். அப்போது, மர்ம நபர்கள் காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து, கன்னைய்யா லால் அளித்த புகாரின் பேரில், கரோல் பாக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT