இந்தியா

ஹெலிகாப்டர் பின்னணியில் ராணுவ கேப்டன் திருமண விருப்பத்தை தெரிவித்ததால் சர்ச்சை

செய்திப்பிரிவு

நாசிக்: ஹெலி​காப்​டர் பின்​னணி​யில் இளம் ராணுவ கேப்​டன் ஒருவர் தனது காதலி​யிடம் திருமண விருப்​பத்தை தெரி​வித்த விவகாரம் சர்ச்​சை​யாகி விவாதத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் ராணுவத்​தின் ஹெலி​காப்​டர் பயிற்சி மையம் உள்​ளது. இங்கு பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் ராணுவ அதி​காரி​களின் குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்கள் பங்​கேற்​பது வழக்​க​மான நடை​முறை.

இங்கு பயிற்​சியை நிறைவு செய்த இளம் ராணுவ கேப்​டன் ஒரு​வர், ராணுவ ஹெலி​காப்​டர் அருகே தனது காதலியை அழைத்து மண்டி​யிட்டு மோதிரத்தை நீட்​டி, திருமண விருப்​பத்தை தெரி​வித்​தார். இந்த போட்டோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது. பலர் இதை பாராட்​டினர். சிலர் இச்​சம்​பவம் ராணுவ ஒழுக்​கம், பாது​காப்பு விதி​முறை​களுக்கு எதி​ரானது என கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

ஓய்வு பெற்ற ராணுவ அதி​காரி​கள் சிலர் கூறுகை​யில், ‘‘இ​தில் என்ன இருக்​கிறது. ராணுவத்​தினரும் மனிதர்​கள்​தானே. ராணுவ ஹெலி​காப்​டர் முழு​வது​மாக படத்​தில் தெரிவது எல்​லாம் பாதுகாப்பு விதி​முறை மீறல் அல்ல. ராணுவ கண்​காட்​சிகளில் போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் பொது​மக்​களின் பார்வைக்கு வைக்​கப்​படு​கின்​றன.

உற்​சாக​மான இளம் அதி​காரி​களை கடுமை​யான கெடுபிடிகளுக்கு ஆளாக்க கூடாது. ராணுவத்​தில் இதுபோல் பல சம்பவங்​கள் நடை​பெற்​றுள்​ளன. இந்த போட்​டோவை ராணுவம் ஆட்​கள் தேர்வு விளம்​பரத்​துக்கு பயன்​படுத்​தி​னால் சிறப்​பாக இருக்​கும்​’’ என நேர்​மறை​யாக கருத்​து தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT