இந்தியா

டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்: இளைஞரை திருமணம் செய்ய இந்தியா வந்த கனடா பெண்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: டேட்டிங் செயலி மூலம் தனக்கு அறி​முக​மான 31 வயது இளைஞரை திரு​மணம் செய்​வதற்​காக ஆயிரக்​கணக்​கான கிலோ மீட்​டர்​கள் பயணம் செய்து ராஜஸ்தானுக்கு வந்​துள்​ளார் கனடா பெண்.

இது​குறித்து ராஜஸ்​தான் மாநிலம் நீம்​ரானா காவல் நிலைய அதிகாரி சுரேந்​திர யாதவ் கூறிய​தாவது: கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்​ணும் ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த நிதினும் (31) ஒரு வருடத்​துக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் முதன்​முதலில் இணைந்​துள்​ளனர். இரு​வரும் திரு​மணம் செய்து கொள்ள ஒப்​புக்​கொண்​டனர்.

இதன்​படி அந்​தப் பெண் சுற்​றுலா விசாவில் கடந்த நவம்​பர் 11-ம் தேதி டெல்லி வந்​துள்​ளார். அந்​தப் பெண்ணை நிதின், நீம்ரானாவுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். திரு​மணம் பற்​றிய பேச்சு நடந்தபோது, கனடா பெண்​ணின் வயது 61 என தெரிய​வந்​ததால் அந்​தப் பெண்ணை திரு​மணம் செய்து​கொள்ள நிதின் மறுத்​துள்​ளார். இத​னால் இரு​வருக்​கும் இடையே தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்து, அந்​தப் பெண் கனடா தூதரகத்​தைத் தொடர்பு கொண்டு புகார் தெரி​வித்​துள்​ளார். காவல் துறை​யினர் நிதினை விசா​ரணைக்​காக காவலில் எடுத்​துள்​ளனர். கனடா பெண் கோட்புட்​லி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளார். இது​குறித்து விசாரணை நடந்து வரு​கிறது. விசா​ரணை​யின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT