இந்தியா

கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு: மதுராவில் போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

மதுரா: கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது. இதன் காரண​மாக மதுரா​வில் நேற்று போலீஸார் குவிக்​கப்​பட்​டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9-ம் தேதி கர சேவைக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது. இதன்​படி ஏராள​மானோர் நேற்று மது​ரா​வுக்கு சென்​றனர்.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மதுரா முழு​வதும் போலீஸார் குவிக்​கப்​பட்​டனர். நான்கு முக்​கிய இந்து மதத் தலைவர்​கள் உட்பட பலர் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். ஷாயி ஈத்கா மசூ​திக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. யாகத்​தில் பங்​கேற்ற மதத் தலை​வர்​கள் கூறும்​போது, “கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வரும் டிசம்​பர் 6-ம் தேதி மீண்​டும் கர சேவைக்கு அழைப்பு விடுக்கிறோம்.

அயோத்தி ராமர் கோயில் போன்று மது​ரா​விலும் பிரம்​மாண்ட கிருஷ்ணர் கோயிலை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​காக ராஜஸ்​தானில் இருந்து கற்​களை வரவழைத்து இருக்​கிறோம். எங்களது கிருஷ்ண ஜென்ம பூமி இயக்​கம், நாடு தழு​விய இயக்கமாக மாறும்” என்​றனர். மதுரா போலீஸ் எஸ்பி ராஜீவ்

குமார் கூறும்​போது, “மதுரா நகருக்​குள் புதி​ய​வர்​கள் நுழைய தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. கர சேவைக்​காக மது​ரா​வுக்கு வந்தவர்​களை கண்​ணி​ய​மாக பேசி திருப்பி அனுப்பி உள்​ளோம். மதுரா எல்​லைகளில் தடுப்​பு​களை அமைத்து அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்​தப்​பட்​டன. மதுரா முழு​வதும் போலீஸ் பாது​காப்பு பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. எவ்வித அசம்​பா​வித​மும்​ நடை​பெற​வில்​லை” என்​றார்​.

SCROLL FOR NEXT