கோப்புப் படம்

 
இந்தியா

மேற்கு வங்கத்தில் பைக்கில் செல்ல கட்டுப்பாடுகளில் மாற்றம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது பைக் பேரணிக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. பைக்குகளில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதற்கு எதிரான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரித்தது. இவ்வழக்கில் நீதிபதி கிருஷ்ணா ராவ், பைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்து உத்தரவிட்டார். ‘‘பைக்கில் ஒருவர் மட்டும் பயணிக்கும் உத்தரவு தேர்தல் நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 வரை மட்டுமே பொருந்தும். என்றாலும் வாக்களிக்க வருவதற்கும் பள்ளி, மருத்துவம், குடும்ப நிகழ்ச்சி போன்ற தேவைகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது. பைக் பேரணிக்கு 48 மணி நேர தடை உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று அவர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT