புதுடெல்லி: மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழக பாஜகவைச் சேர்ந்த எல். முருகன், கட்சிப் பணிகளை கவனிக்கப் போவதாகக் கூறி, கடந்த 14-ம் தேதி தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பதவிக்காலம் வரும் 2030 வரை இருந்தது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பில், “ம.பி.யில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்.26-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய நவ.2 கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை நவ.3-ல் நடைபெறும்.
வேட்புமனுக்களை நவ.5-ம் தேதி வரை திரும்பப் பெறலாம். நவ.12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் நடைமுறைகள் நவ.16-ம் தேதிக்குள் நிறைவடையும்.மேலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.