இந்தியா

பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது.

பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கரோ​னா​வால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் ஹைத​ரா​பாத்தில் உள்ள ரவீந்​திர​பாரதி வளாகத்​தில் எஸ்​பிபி-​யின் சிலையை முன்​னாள் குடியரசு துணைத்​தலை​வர் வெங்​கய்ய நாயுடு, ஹரி​யானா முன்​னாள் ஆளுநர் பண்​டாரு தத்​தாத்​ரே​யா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆந்​தி​ரா​வின் கிழக்கு கோதாவரி மாவட்​டத்​தில் எஸ்​பிபி​யின் 7.2 அடி உயர வெண்கல சிலை உரு​வாக்​கப்​பட்​டது. நின்ற நிலை​யில் உள்ள எஸ்​பிபியின் சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்​டிருந்​தது. இவ்விழா​வில் அமைச்​சர் ஸ்ரீதர் பாபு, தெலங்​கானா பாஜக தலை​வர் ராமசந்​தர் ராவ், எஸ்​பிபி​யின் மனை​வி, பாடகரும் அவரது மகனு​மான எஸ்​பிபி சரண், தங்கை எஸ்பி சைலஜா, அவரது குடும்​பத்​தார்​பங்​கேற்​றனர்.

இவ்​விழா​வில் வெங்​கைய்ய நாயுடு பேசும்​போது, ‘‘பாடகர் எஸ்​பிபி அனை​வருட​னும் நட்​புடன் பழகுபவர், மரி​யாதை​யுடன் நடந்து கொள்​பவர். மேலும், அவர் ஒரு பரிபூரண கலைஞர். பல துறை​களில் அவர் சிறந்து விளங்​கி​னார். ஒரு பாடக​ராக, இசையமைப்​பாள​ராக, நடிக​ராக, தயாரிப்​பாள​ராக அவர் சிறந்து விளங்​கி​னார். தெலுங்கு பாடல்​களுக்கு கண்​ட​சாலா​வும், எஸ்​பிபி​யும் இரு சிகரங்​கள் என்​று கூறலாம். எஸ்​பிபி-​யின் பெயர் வரலாற்​றில் இடம்பிடித்து விட்​டது’’ என்​றார்.

கடும் எதிர்ப்பு: இந்​நிலை​யில், எஸ்​பிபி​யின் சிலை திறப்பு விழாவுக்கு தெலங்​கா​னா​வில் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. முன்​னாள் முதல்​வர் சந்​திரசேகர ராவின் மகள் கவிதா, தெலங்​கா​னா​வாதி அமைப்பினர் பலர் சிலை திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

ஆந்​தி​ராவை சேர்ந்த எஸ்​பிபி, ஒரு கால​கட்​டத்​தில் தெலங்​கானா தாய் வாழ்த்தை பாட விரும்​ப​வில்​லை. ஆதலால் அவரின் சிலை திறப்பு விழா தெலங்​கானா மண்​ணில் நிகழ கூடாது என வலி​யுறுத்தி சிலை திறப்பு விழாவை தடுத்து முற்​றுகை போராட்​டம் செய்ய போவ​தாக அறி​வித்​தனர்.

முன்​ன​தாக, இச்​சிலையை தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​தான் திறக்க உள்​ள​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்​பு​கள் கிளம்​பிய​தால் கடைசி நிமிடத்​தில் முதல்​வர் ரேவந்த் ரெட்டி வரவில்லை என அறிவிக்​கப்​பட்​டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT