மும்பை: பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம்ஸ். அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான அவர், கடந்த 2020-ம் ஆண்டில் “தி எர்த்ஷாட் பிரைஸ்” என்ற விருதை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவு விருதுக்கும் தலா ரூ.11 கோடி ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது.
மும்பை பாந்த்ரா கிழக்கில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் பாந்த்ரா - வோர்லி சாலையில் மின்சார ஆட்டோவை ஓட்டிச் சென்றார். ஆட்டோவின் பின் இருக்கையில் அவரது மனைவி கேத் மிடில்டன் அமர்ந்திருந்தார்.
இந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்று நாள் சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று இளவரசர் வில்லியம்ஸ் டெல்லிக்கு செல்கிறார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.