இந்தியா

உடல் தானம், பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.1 கோடி: ஓய்வு நாளில் நீதிபதி அவனிந்​திர குமார் சிங் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஜபல்பூர்: மருத்துவ ஆராய்ச்சிக்​காக உடலை தான​மாக வழங்குவேன். வருங்​கால வைப்பு நிதி மூலம் கிடைக்​கும் ரூ. 1 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிப்​பேன் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அவனிந்​திர குமார் சிங் தெரிவித்துள்​ளார்.

உத்தர பிரதேசத்​தின் எட்டா நகரைச் சேர்ந்​தவர் அவனிந்​திர குமார் சிங் (62). வழக்​கறிஞ​ரான இவர் கடந்த 1990-ம் ஆண்டு கீழமை நீதி​மன்ற நீதிப​தி​யாக பதவி​யேற்​றார். பல்​வேறு நீதிமன்றங்​களில் பணி​யாற்​றிய அவர் கடந்த 2023-ம் ஆண்டு மே 1-ம் தேதி மத்​திய பிரதேச உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பதவியேற்றார்.

சுமார் 37 ஆண்​டு​கள் நீதித் துறை​யில் சேவை செய்த அவர் கடந்த 17-ம் தேதி ஓய்வு பெற்​றார். அன்​றைய தினம் ஜபல்​பூர் நகரில் அவருக்கு பிரிவு உபசார விழா நடை​பெற்​றது. அப்​போது நீதிபதி அவனிந்​திர குமார் சிங் பேசி​ய​தாவது: நாம் கடவுளை வழிபடுகிறோம். அவருக்கு சேவை செய்​கிறோம்.

அதோடு மட்டுமல்லாமல் கடவுள் படைத்த அனைத்து உயிர்​களுக்​கும் சேவை செய்​வது நமது கடமை ஆகும். நானும் எனது மனைவி இந்தி​ரா​வும் எங்​களது உடல்​களை மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக தான​மாக வழங்க முடிவு செய்​துள்​ளோம்.

இதுதொடர்​பான உறு​தி​மொழி பத்​திரத்​தி​லும் கையெழுத்​திட்டு விட்​டோம். வருங்​கால வைப்பு நிதி மூலம் எனக்கு ரூ.1 கோடியே 10 லட்​சம் கிடைக்​கும். இந்த தொகை முழு​வதை​யும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்க முடிவு செய்​துள்​ளேன். எனது வாழ்க்​கை​யின் அனைத்து வெற்​றிக்​கும் மனை​வியே காரணம். எங்​களது உடல்களை மருத்​துவ ஆராய்ச்​சிக்கு வழங்​க​வும் வருங்​கால வைப்பு நிதியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்​க​வும் எனது மனைவியே ஆலோ​சனை கூறி​னார். இதை அப்​படியே ஏற்றுக்கொண்​டேன்.

சுமார் 37 ஆண்டு கால நீதிபதி வாழ்க்​கை​யில் நூறு சதவீத நேர்மையை கடைபிடித்து உள்​ளேன். விமர்​சனங்​களை பார்த்து அஞ்சக்​கூ​டாது. எவ்​வித அழுத்​தத்​துக்​கும் ஆளாகக்​கூ​டாது. நேர்மை​யாக, நிதான​மாக இருந்து தீர்ப்பு வழங்க வேண்​டும் என்று மூத்த நீதிபதி ஒரு​வர் எனக்கு அறி​வுரை கூறி​னார்.

அவரது அறி​வுரையை கண்​டிப்​புடன் பின்​பற்​றினேன். நீதிபதி பதவி​யில் இருந்து ஓய்வு பெற்​றாலும் மக்​கள் சேவை​யில் தொடர்ந்து ஈடு​படு​வேன். ஏழைகளுக்கு தேவை​யான சட்ட ஆலோசனை​களை வழங்​கு​வேன். இவ்​வாறு நீதிபதி அவனிந்​திர குமார் சிங்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT