இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 போலீஸ் அதிகாரிகள் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், கிஷ்த்​வார் மாவட்​டத்​தின் தொலை​தூரப் பகு​தி​யான டாச்​சன்​-​மார்வா பகு​தி​யில், ராணுவத்​தினருடன் இணைந்​து, போலீஸ் அதி​காரி​களான ராஷ்​பால் குமார் (40), பாபி சந்த் (54) ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அவர்​கள் தேர்னா சோதனைச் சாவடிக்​குச் சென்று கொண்​டிருந்தபோது மாயமாகினர்.

இதையடுத்​து, தேர்னா பாது​காப்பு சோதனைச் சாவடி​யில் இருந்து சென்ற தேடு​தல் குழு​வினர் அவர்​களை தேடும் பணி​யில் ஈடுபட்டனர். அப்​போது, குண்​டு​கள் துளைத்த நிலை​யில் அவர்களது உடல்​களைக் கண்​டெடுத்​தனர். அவர்​களில் ஒரு​வரது தலை​யிலும், மற்​றொரு​வரது முதுகிலும் துப்​பாக்​கிக் குண்​டு​கள் பாய்ந்த காயங்​கள் இருந்​தன. அவர்​கள் வைத்​திருந்த துப்​பாக்​கி​களும் காண​வில்​லை. இரு​வரை​யும் கொன்ற பின்​னர் தீவிர​வா​தி​கள் அந்த ஆயுதங்​களை எடுத்​துச் சென்​றிருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது.

முதற்​கட்ட தகவல்​களின்​படி, இரு​வரும் ராணுவத்​தினருடன் இணைந்து ரோந்​துப் பணி​யில் ஈடு​படு​வதற்​காக, தேர்னா சோதனைச் சாவடிக்​குச் சென்று கொண்​டிருந்த போது மாயமாகியுள்​ளனர். முதலில் இரு​வரது செல்​போன்​களும் தொடர்பில் இருந்த நிலை​யில், பின்​னர் அவை அணைக்கப்பட்டன. இதனால் பாது​காப்​புப் படை​யினருக்கு சந்தேகம் ஏற்​பட்​டது.

இரு​வரும் பணிக்​குத் திரும்​பாத​தால் தேடு​தல் நடவடிக்கை தொடங்​கப்​பட்​டது. இதையடுத்​து, நேற்று தேர்னா டாப் பகு​தி​யில் அவர்​களது உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இந்​தக் கொடூரச் செயலில் ஈடு​பட்​ட​வர்​களைக் கைது செய்​வதற்​காக போலீ​ஸாரும், பாதுகாப்புப் படை​யினரும் இணைந்து தேடு​தல் வேட்​டையைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT