இந்தியா

காவல் நிலையத்தில் வெடி விபத்து: 4 ஆந்திர போலீஸார் படுகாயம்

செய்திப்பிரிவு

விஜயவாடா: ஆந்​திர காவல் நிலை​யத்​தில் பறி​முதல் செய்யப்பட்ட வெடிமருந்து வெடித்​த​தில் 4 போலீ​ஸார் படு​கா​யம் அடைந்​தனர்.

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் சல்​லிபல்லி பகு​தி​யில் காவல் நிலை​யம் உள்​ளது. இங்​குள்ள போலீ​ஸார் நேற்று சட்​ட​விரோத​மாக வெடிமருந்து விற்​கப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் ஓரிடத்​தில் சோதனை நடத்​தி, வெடிமருந்​துகளை பறி​முதல் செய்​தனர். இதையடுத்து அவற்றை ஒரு ஜீப்​பில் காவல் நிலை​யம் கொண்டு வந்து பத்​திரப்​படுத்த முயன்​றனர்.

          

அப்​போது திடீரென வெடிமருந்து பயங்கர சத்​தத்​துடன் வெடித்ததில் சப் இன்​ஸ்​பெக்​டர், ஜீப் ஓட்​டுநர் மற்​றும் 2 கான்​ஸ்​டபிள்​கள் படு​கா​யம் அடைந்​தனர். மேலும் காவல் நிலை​யத்​தில் இருந்த மேஜை, நாற்​காலிகள், ஜன்​னல் கண்​ணாடிகள், வெளி​யில் இருந்த போலீஸ் வாக​னம் போன்​றவை சேதம் அடைந்​தன.

இந்த சம்​பவத்​தில் காயமடைந்த போலீ​ஸார் விஜய​வா​டா​வில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் சப்​-இன்​ஸ்​பெக்​டரின் நிலைமை மோச​மாக இருப்​ப​தாக கூறப்படுகிறது. இந்த சம்​பவம் தொடர்​பாக உள்​துறை அமைச்​சர் அனிதா வி​சா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT