இந்தியா

மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க பாஜக வெற்றி பெறுவது அவசியம்: மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அமைச்​சர் சுகந்த மஜும்​தார் பிடிஐ செய்தி நிறுவனத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறியிருப்ப​தாவது: மேற்கு​ வங்​கத்​தின் பல்​வேறு மாவட்டங்​களில் இந்​துக்​கள் சிறு​பான்மை​யின​ராக மாறி வரு​கின்​றனர். மாநில மக்​கள் தொகை​யில் 33% பேர் முஸ்லிம்கள் என்று முதல்​வர் மம்தாவே கூறியிருக்கிறார். முஸ்​லிம்​கள் மேலும் அதி​கரித்​தால் இந்து வேட்​பாளர்​கள் வெற்றி பெறுவது மிக​வும் கடின​மாகி​விடும்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இந்​துக்​களுக்​கான கடைசி வாய்ப்பு ஆகும். இந்​துக்​களை பாது​காக்க இந்த தேர்​தலில் பாஜக வெற்றி பெறு​வது அவசி​யம். ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி, இந்து வேட்​பாளர்​களை​விட முஸ்​லிம் வேட்​பாளர்​களை அதிக அளவில் களம் இறக்​கு​கிறது. முஸ்​லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு​வர் துணை முதல்​வ​ராக பதவி​யேற்க வேண்​டும் என்ற குரல் இப்​போதே ஒலிக்​கத் தொடங்​கி​விட்​டது. எனவே மேற்​கு​வங்​கத்தை பாது​காக்க பாஜக​வுக்கு மக்​கள் வாக்​களிக்க வேண்​டு​கிறேன். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

          
SCROLL FOR NEXT