இந்தியா

பாஜக செயல் தலைவர் நிதின் நபின் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் (45) பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாஜக செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினை சந்தித்தேன். அவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புக்கு வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் கட்சியை வலுப்படுத்தும் அவரது முயற்சி சிறக்க நல்வாழ்த்துகளைக் கூறினேன்’’ என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதின் நபின் எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டதைக் கேட்டது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்’’ என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT