இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி

மோகன் கணபதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஃபால்டா தொகுதியில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மறுவாக்குப்பதிவு இம்மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்த தொகுதியில், பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிபிஎம் வேட்பாளர் ஷம்புநாத் குர்மி 40,600க்கும் அதிக வாக்குகளைப் பெற்று இரணடாம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜஹாங்கீர் கான் 7,700க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் நான்கம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஏற்கனவே 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT