இந்தியா

ரூ.43 லட்சம் கடிகாரம் அணிந்த சித்தராமையா, டி.கே.சிவகுமார்

செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘‘சோசலிச கருத்​துக்​களை பேசிவரும் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வும், துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாரும் ரூ.43 லட்​சம் மதிப்​புள்ள ஆடம்பர‌ கைக்​கடி​காரங்​களை அணிந்​திருப்​பது ஏன்​?'' என பாஜக கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வும், துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாரும் ரூ.43 லட்​சம் மதிப்​புள்ள ‘சாண்​டோஸ் டி கார்​டியர்’ கைக்​கடி​காரங்​களை அணிந்​திருக்​கும் புகைப்​படங்​கள் அண்​மை​யில் சமூக வலைத்​தளங்​களில் வைரலா​யின.

இதனை கர்​நாடக பாஜக​வின் அதி​காரப்​பூர்வ சமூக வலைதள பக்​கங்​களில் பகிர்ந்​து, “'சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் தங்​களை சோசலிச தலை​வர்​களாக சொல்​லிக் கொள்​கின்​றனர். ஆனால் இரு​வரும் பெரும் பணக்​காரர்​கள் பயன்​படுத்​தும் ரூ.43 லட்​சம் மதிப்​புள்ள கைக்​கடி​காரங்​களை அணிந்​துள்​ளனர்.

சோசலிசம் என்​றால் மிக உயர்ந்த விலை கொண்ட பொருட்​களை பயன்​படுத்​து​வது என்று அர்த்​த​மா? கர்​நாடக மக்​கள் வறட்சி மற்​றும் மோச​மான உள்​கட்​டமைப்​புடன் பிரச்​சினை​களில் சிக்​கித் தவிக்​கும்​போது இந்த‌ ‘எளிய சோசலிஸ்ட்’ தலை​வர்​கள் சாண்​டோஸ் டி கார்​டியரைக் கைக்​கடி​காரங்​களை அணிந்​திருப்​பது முரணாக இருக்​கிறது” என விமர்​சித்​துள்​ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சித்​த​ராமையா ரூ.70 லட்​சம் மதிப்​புள்​ள ஆடம்​பர கைக்​கடி​காரத்​தை அணிந்​திருந்​த​தால்​ பெரும்​ சர்​ச்​சை ஏற்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT