மல்லிகார்ஜுன கார்கே

 
இந்தியா

கார்கே பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தீ​விர​வாதி என்ற பிரதமர் மோடிக்கு எதி​ரான கருத்து தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட தடை விதிக்க வேண்​டும் என்று பாஜக கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக, மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், கிரண் ரிஜிஜு, அர்​ஜுன் ராம் மேக்​வால் உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் நேற்று தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்​தல் ஆணை​யர்​களை சந்​தித்​தனர். பிரதமர் மோடியை ‘தீ​விர​வா​தி’ என்று மல்​லி​கார்​ஜுன கார்கே விமர்​சித்​தது குறித்து புகார் அளித்​தனர்.

அப்​போது, “பகிரங்க மன்​னிப்பு கோரு​மாறு கார்​கேவுக்கு உத்​தர​விட வேண்​டும், தேவைப்​பட்​டால் தேர்​தல் பிரச்​சார கட்​டுப்​பாடு​களை விதிக்க வேண்​டும். மேலும் அவருக்கு எதி​ராக சட்ட நடவடிக்கை எடுப்​பது குறித்து பரிசீலிக்க வேண்​டும். ஊடகங்​கள் மற்​றும் டிஜிட்​டல் தளங்​களில் அவரது கருத்து மேலும் பரவுவதை தடுக்க உத்​தர​விட வேண்​டும்” என்று அவர்​கள் கோரினர்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் கிரண் ரிஜிஜு கூறுகை​யில், “கார்​கே​வின் கருத்து அதிர்ச்சி அளிக்​கிறது. இது, இந்​திய அரசி​யலில் முன்​னெப்​போதும் இல்​லாதது. தேர்​தல் ஆணை​யத்​தின் மீது நாங்​கள் முழு நம்​பிக்கை வைத்​துள்​ளோம். கடும் நடவடிக்கை எடுக்​கும் என நம்​பு​கிறோம்” என்​றார். அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறுகை​யில், “ஒரு மூத்த தலை​வர் இத்​தகைய வார்த்​தையை திரும்​பத் திரும்​பப் பயன்​படுத்​து​வது ஒரு தவறான போக்கை காட்​டு​கிறது” என்​றார்.

தமிழ்​நாட்​டில் செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​போது மல்​லி​கார்​ஜுன கார்கே இந்த சர்ச்​சைக்​குரிய கருத்தை கூறி​னார். இது தொடர்​பாக அவர் அளித்த விளக்​கத்​தில், மக்​களை​யும் அரசி​யல் கட்​சிகளை​யும் பிரதமர் மோடி பயமுறுத்​துகிறார் என்றே தான் குறிப்​பிட்​ட​தாக​வும் அவரை தீவிர​வாதி என்று ஒரு​போதும் அழைக்​க​வில்லை என்​றும் கூறி​யிருந்​தார். இந்நிலையில் பாஜகவின் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT