இந்தியா

இந்திய மாலுமிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியை அம்பலப்படுத்திய சசி தரூர்: பாஜக

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய மாலுமிகள் தாக்​கப்​பட்ட விவ​காரத்​தில், உண்மை தகவலைக் கூறி, ராகுல் காந்​தி​யை சசி தரூர் அம்​பலப்​படுத்​தி​யுள்​ளார் என்று பாஜக கூறி​யுள்​ளது.

ஓமன் கடல் பகு​தி​யில் அமெரிக்​கக் கடற்​படை​யின் உத்​தர​வு​களை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முயன்ற எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்​கப் படை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்​தித்த போது, இந்த விஷ​யத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​காமல் மவுனம் காத்​தார். இச்​சம்​பவத்​துக்​காக மன்​னிப்பு கோரும்​படி அமெரிக்​கா​விடம் கோர​வில்​லை’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கடந்த வெள்​ளிக்​கிழமை அளித்த பேட்​டி​யில், ‘‘ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்​தித்த போது, இந்​திய மாலுமிகள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​வது குறித்த கவலை​யைத் தெரி​வித்​தார். வர்த்​தகக் கப்​பலில் பணி​யாற்​றும் மாலுமிகள் மீது தாக்​குதல் நடத்​தக் கூடாது என்று திட்​ட​வட்​ட​மாகக் கூறி​னார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் பொது​விலும், தனிப்​பட்ட முறை​யிலும் பேசிய போது, இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்​தி​னார்’’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​திய மாலுமிகள் தாக்​கப்​பட்ட விஷ​யத்​தில் ராகுல் காந்தி கூறிய கருத்து தவறு என்​பதை சசி தரூர் அம்​பலப்​படுத்​தி​விட்​டார்.

நாட்டு நலனைப் பாது​காக்​கும் விஷ​யத்​தில் பிரதமர் மோடி எப்​போதும் முதல் நபராக உள்​ளார். நாட்டு நலனுக்கு எதி​ராக பேசுவ​தில் ராகுல் காந்தி அனை​வரை​யும் பின்​னுக்​குத்​ தள்​ளி​விடு​வார்​’’ என்​று ​விமர்​சித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT