புதுடெல்லி: கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை (மார்ச் 23) கடைசி நாளாகும். பாஜக சார்பில் 47 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலும் 39 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.
இந்நிலையில் 11 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் கரமனா ஜெயன் (திருவனந்தபுரம்), ரவீந்திரநாத் வகாதானம் (புதுப்பள்ளி), ஆர்.எஸ்.அருண்ராஜ் (சடையமங்கலம்), வி.ரதீஷ் (பீருமேடு), விவேக் கோபன் (அருவிக்கரா), டி.என்.சுரேஷ் (கோவளம்) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.