புதுடெல்லி: டாடா குழும நிறுவனங்களின் தேர்தல் அறக்கட்டளையான புரொக்ரஸிவ் எலக்ட்ரல் டிரஸ்ட் (பிஇடி), 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி 10 கட்சிகளுக்கு மொத்தம் ரூ.914 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 83% (ரூ.757 கோடி) பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 8.4% (ரூ.77.3 கோடி) வழங்கப்பட்டுள்ளது. இதுபோல திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.