பாஜக எம்.பி. கங்கனா

 
இந்தியா

சிஜேபி போராட்டக்காரர்கள் பற்றி பாஜக எம்.பி. கங்கனா விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத் தாள் கசிவு விவ​காரத்​தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்​டம் குறித்து பாஜக எம்​.பி. கங்​கனா ரணாவத் தனது இன்​ஸ்​டாகி​ராம் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: “கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யினரின் போராட்ட வீடியோக்​களை பார்த்​தேன். என் வாழ்​நாளில் ஒரே இடத்​தில் இவ்​வளவு மோச​மான காட்​சிகளை நான் பார்த்​ததே இல்​லை. அவர்​கள் பேசும் விதம், பயன்​படுத்​தும் மொழி மிக கொடூர​மாக​வும், கீழ்த்​தர​மாக​வும் உள்ளது.

இவர்​களை யார் பெற்று வளர்க்​கிறார்​கள்? இந்​தியா அழகான பன்​முகத்​தன்மை கொண்ட மக்​கள், கண்​ணி​யத்​துட​னும் கலாச்​சா​ரத்​துட​னும் வாழும் இடம். உங்​களை நீங்​களே கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்​துக் கொண்​டு, அவற்றை போலவே செயல்படுகிறீர்கள். உலகிற்கு உங்​கள் குப்​பையை​யும், அசுத்தத்தை​யும் காட்​டு​கிறீர்​கள்.

உங்​களின் வீடியோக்​களைப் பார்த்து எனது மனம் பாதிப்படைந்துள்​ளது. இதிலிருந்து மீள சமூக வலைத்​ தளங்களிலிருந்து வில​கி​யிருப்​பது​தான் நல்​லது. வி​னாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்​கல் செய்​வதற்​கும் எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் இடையூறு செய்​கின்​றனர். கல்​விச் சீர்​திருத்​தங்​களை அவர்​கள் வேண்​டுமென்றே தடுக்​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT