இந்தியா

“தாதா போல நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி” - பாஜக எம்.பி. கங்கனா சர்ச்சை பேச்சு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஒரு தாதா போல பொறுப்​பற்ற வகை​யில் நடந்து கொள்​கிறார். அவரது செயல்​பாடு​கள் பெண்​களுக்கு மிகுந்த அசவு​கரி​யத்தை ஏற்படுத்து​வ​தாக உள்​ளது என்று பாஜக எம்​.பி.கங்​கனா ரனாவத் கூறி​யுள்​ளார்.

நாடாளு​மன்ற நுழைவு வாயில் அருகே படிக்​கட்​டில் அமர்ந்து கொண்டு மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தேநீர் அருந்​தி பிஸ்​கட் சாப்​பிட்ட சம்​பவம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

இது குறித்து பாஜக எம்​.பி. கங்​கனா ரனாவத் கூறுகை​யில், “ராகுல் காந்​தி​யைப் பார்க்​கும் போது எங்​களுக்கு (பெண்​களுக்​கு) மிகுந்த சங்​கட​மாக இருக்​கிறது. அவர் ஒரு ‘தபோரி’ (தா​தா) போல பொறுப்பற்ற முறை​யில் நாடாளு​மன்​றத்​துக்கு வரு​கிறார். யாரைப் பார்த்தா​லும் மரி​யாதை இல்​லாமல் ஒரு​மை​யில் பேசுகிறார்.

          

யாராவது பேட்டி அளித்​துக் கொண்​டிருந்​தால், அங்கு சென்று கூச்சலிட்டு இடையூறு செய்​கிறார். ராகுல் தனது சகோ​தரி பிரியங்கா காந்​தி​யின் கண்​ணி​ய​மான நடத்​தையைப் பார்த்து கற்​றுக் கொள்ள வேண்​டும்" என்​றார்.

அதிகாரிகள் கண்டனம்: இது நாடாளுமன்ற மாண்பைக் குலைக்கும் செயல் எனக் கூறி, முன்னாள் டிஜிபி எஸ்.பி. வைத் தலைமையில் 84 முன்னாள் அதிகாரிகள், 116 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் 4 வழக்கறிஞர்கள் ராகுல் காந்திக்கு எதிராக பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.

SCROLL FOR NEXT