பாஜக எம்​எல்ஏ பிரீத்​தம் லோதி

 
இந்தியா

மாட்டு சாணத்தை கொட்டி வீட்டை நிரப்புவேன்: போலீஸ் அதிகாரிக்கு பாஜக எம்எல்ஏ மிரட்டல்

செய்திப்பிரிவு

போபால்: ம.பி.​யின் பிச்​சோர் தொகுதி பாஜக எம்​எல்ஏ பிரீத்​தம் லோதி. இவரது மகன் தினேஷ் லோதி கடந்த 16-ல் சிவபுரி மாவட்டம் கரேரா பகு​தி​யில் காரில் சென்றார்.

அப்​போது அவரது கார் மோதி 5 பேர் காயம் அடைந்​தனர். இதையடுத்து தினேஷ் லோதியை சிவபுரி மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் ஆயுஷ் ஜாக்​கர் வரவழைத்​து, மீண்​டும் கரேரா வர வேண்​டாம் என எச்​சரித்து அனுப்​பி​னார். இதனால் எம்​எல்ஏ பிரீத்​தம் லோதி கோபம் அடைந்​தார்.

“கரேரா என்ன உங்​கள் அப்​பாவுக்கு சொந்​த​மான​தா ? எனது மகன் அங்கு செல்​வான். துணி​விருந்​தால் அவனை தடுத்​துப் பார். எங்கள் பின்​னணி என்​ன வென்று உனக்​குத் தெரிந்​திருக்க வேண்டும்" என்று பிரீத்​தம் லோதி மிரட்​டல் விடுத்​தார். பிறகு இந்த விவ​காரத்​தில் "அந்த போலீஸ் அதி​காரி​யின் வீட்டை மாட்டு சாணத்​தால் நிரப்​புவேன்" என்​றார்.

அவரது பேச்​சுக்கு ஐபிஎஸ் அதி​காரி​கள் சங்​கம் கண்​டனம் தெரிவித்​துள்​ளது. பிரீத்​தம் லோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் கோரிக்கை விடுத்துள்​ளது.

பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஹிதேஷ் பாஜ்​பாய் கூறுகை​யில், "நாங்​கள் சட்​டத்​தின் ஆட்​சியை நம்​பு​கிறோம். அதே நேரம், அதிகாரி​களும் மக்​கள் பிர​தி​நி​தி​களும் பொது​ வெளி​யில் பேசும்போது கண்​ணி​யத்தை கடைப்​பிடிப்​பார்​கள்​ என்​று எதிர்பார்க்​கிறோம்​" என்​றார்​.

SCROLL FOR NEXT