இந்தியா

Exit Poll Results 2026: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி-மார்க் (P-MARQ) வெளியிட்டுள்ள கருத்துக் கணபிப்பில், பாஜக 150 தொகுதிகள் முதல் 175 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 118-138 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

போல் டயரி (Poll Diary) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 142-171 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 99-127 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-1 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாட்ரிஸ் (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 146-161 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 125-140 தொகுதிகளிலும், மற்றவர்கள் 6-10 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 148 தொகுதிகள் தேவை. மேற்கு வங்கத்தில் இம்முறை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

ஏப்​ரல் 23-ம் தேதி நடந்த முதற்​கட்​டத் தேர்​தலில் 152 தொகுதி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில், பல பகு​தி​களில் கிட்​டத்​தட்ட 93% என்ற சாதனை அளவி​லான வாக்​கு​கள் பதி​வாகின. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், மாலை 5 மணி வரை 90% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம்​ தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT