மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கலிதா மாஜி

 
இந்தியா

மே.வங்கத்தில் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் 2-வது முறையாக போட்டி

செய்திப்பிரிவு

ஆஷ்கிராம்: மேற்கு வங்​க மாநிலம் பூர்பா பர்​தமான் மாவட்​டத்​தில் ஆஷ்கி​ராம் தொகு​தி​யின் பாஜக வேட்​பாள​ராக வீட்டு வேலை செய்​யும் பெண் தொடர்ந்து 2-வது முறை​யாக களம் இறங்​கி​யுள்​ளார்.

மேற்கு வங்​க மாநிலம் பூர்பா பர்​தமான் மாவட்​டம் ஆஷ்கி​ராம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கலிதா மாஜி. கணவரின் வரு​மானம் குறை​வாக இருப்​ப​தால், இவர் 2 வீடு​களில் வேலை செய்து மாதம் ரூ.4,000 சம்​பா​திக்​கிறார். கடந்த 10 ஆண்​டு​களாக இவர்பாஜக​வில் உள்​ளார்.

          

இவரை கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆஷ்கி​ராம் தொகுதி வேட்​பாள​ராக பாஜக நிறுத்​தி​யது. ஆனால், அவர் வெற்​றி​பெற​வில்​லை.

இந்​நிலை​யில் தற்​போது நடை​பெறும் தேர்​தலிலும் கலிதா மாஜியை மீண்​டும் வேட்​பாள​ராக பாஜக அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து கலிதா மாஜி கூறும்போது, “தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிட பாஜக வாய்ப்பு அளிக்​கும் என நினைக்​க​வில்​லை. பாஜக என்மீது நம்​பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்​கி​யுள்​ளது.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் கவனம் செலுத்​து​வேன். எனக்கு வேலை கொடுத்​தவர்​களும், நான் இந்த முறை வெற்றி பெற வாழ்த்தி அனுப்​பி​யுள்​ளனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT