புதுடெல்லி: பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் நேற்று வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தராகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், டெல்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்புச் செயலராக பி.எல். சந்தோஷும், பொருளாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேசிய பொதுச் செயலர்களாக 8 பேரும், தேசிய செயலர்களாக 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் விவரம் வருமாறு:
தேசிய துணைத் தலைவர்கள்
வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), தீரத் சிங் ராவத் (உத்தராகண்ட்), ராம் மாதவ் (டெல்லி), பைஜெயந்த் ஜே பாண்டா (ஒடிசா), டி.புரேந்தஸ்வரி (ஆந்திரா), ரேகா வர்மா (உத்தர பிரதேசம்), வர்ஷா பென் நரேந்திரபாய் தோஷி (குஜராத்), டாக்டர் பார்தி பிரவீன் பவார் (மகாராஷ்டிரா), மன்பிரீத் சிங் பாத் (பஞ்சாப்), லால் சிங் ஆர்யா (மத்திய பிரதேசம்), எம்.நாகராஜா (கர்நாடகா), பேராசிரியர் தாரிக் மன்சூர் (உத்தர பிரதேசம்), டாக்டர் மதுசந்திரகர் (மேற்கு வங்கம்).
தேசிய பொதுச் செயலர்கள்
வினோத் தாவ்டே (மகாராஷ்டிரா), சுனில் பன்சால்(டெல்லி), பிப்லப் குமார் தேவ்(திரிபுரா), ஸ்மிருதி இரானி (உத்தரபிரதேசம்), டாக்டர் சதீஷ் பூனியா (ராஜஸ்தான்), கஜேந்திர படேல் (மத்திய பிரதேசம்), ஹரிஷ் திவிவேதி (உத்தரபிரதேசம்), சஞ்சய் பாட்டியா(ஹரியானா), பி.எல்.சந்தோஷ் (தமிழ்நாடு).
தேசியச் செயலர்கள்
கவிதா பட்டிதார், கே.சுரேந்திரன், டாக்டர் போலா சிங், டாக்டர் பிரதீப் வர்மா, ஜெகதீஷ் ஐஸ்வர்பாய் படேல், டாக்டர் சந்தீப் பதக், பங்க்னான் கோன்யாக், சங்கீதா யாதவ், அனில் அந்தோணி, எம்.வெங்கடேசன், மனோஜ் டிக்கா, சித்தார்த் ஷாம்பு, டாக்டர் ஸ்வதேஷ் சிங், மிருகன்கா தேவ் வர்மன், ரோஹன் குப்தா, ஜெய் பிரகாஷ். இவர்கள் தேசிய இணைப்பொதுச் செயலராக (அமைப்பு) மும்பையைச் சேர்ந்த சிவபிரகாஷும், தேசிய இணைப் பொதுச் செயலராக (அமைப்பு) ரோஹன் குப்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.