இந்தியா

உ.பி. மாநிலங்களவைத் தேர்தலுக்கான 8 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பெயர் இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் 10, உத்​த​ராகண்​டில் 1 மாநிலங்களவை இடங்​கள் விரை​வில் காலி​யாக உள்​ளன. இது​போல மேற்கு வங்​கத்​தில் ஒரு இடம் காலி​யாக உள்​ளது. இந்த 12 இடங்​களுக்கும் அக்​டோபர் 16-ம் தேதி அன்று தேர்​தல் நடை​பெற உள்​ளது.

ஓய்​வு​பெறும் உறுப்​பினர்​களில் மத்​திய அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி, அருண் சிங், நீரஜ் சேகர், பிரிஜ்லால், மத்​திய இணை அமைச்சர் பி.எல். வர்​மா, சீமா துவிவேதி ஆகிய பாஜக தலைவர்கள், சமாஜ்​வாதி கட்​சி​யின் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்​சி​யின் ஒரு உறுப்​பினர் அடங்​கு​கின்​றனர். உ.பி.யில் காலி​யாக உள்ள பத்​தில் எட்டு இடங்​கள் பாஜக​விடம் உள்​ளன.

கட்​சி​யின் மத்​தி​யத் தேர்​தல் குழு ஒப்​புதல் அளித்த 8 வேட்பாளர்களின் பட்​டியலை கட்​சி​யின் தேசி​யத் தலை​மையகப் பொறுப்​பாள​ர் தருண் சுக் வெளி​யிட்​டார். அதில் தரம்​பால் சிங், ராதா​காந்த் ஓஜா, பிர​காஷ் பால், வித்​யா​சாகர் சோன்​கர், கோபி கிருஷ்ண பாண்​டே, ராம் பிர​தாப் சிங் சவுஹான் ஆகியோர் உள்ளனர். பிரி​யங்கா சிங் ராவத், ஸ்ருதி கங்​வார் ஆகிய இரு பெண்​களும் உள்​ளனர்.

தரம்​பால் சிங், பிர​காஷ் பால், ஸ்ருதி கங்​வார் ஆகியோர் ஓபிசி வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். வித்​யா​சாகர் சோன்​கர், பிரி​யங்கா சிங் ராவத் ஆகியோர் பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர்​கள். இது 2027 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்ட சமூகக் கணக்கீடாகக் கருதப்​படு​கிறது. பட்​டியல் வெளி​யானதும் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் வேட்​பாளர்​களுக்கு வாழ்த்து தெரிவித்​தார்.

மாநிலங்​களவை​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு 150 இடங்​கள் உள்​ளன. உத்தர பிரதேச சட்​டப்​பேர​வை​யில் தற்​போது 396 உறுப்​பினர்​கள் உள்​ளனர். ஒரு வேட்​பாளர் வெற்​றி​பெற 37 முதல் விருப்ப வாக்​கு​கள் தேவை. இதன்​படி சமாஜ்​வாதி கட்​சிக்கு இரண்டு இடங்​கள் உறு​தி​யாகும். மீத​முள்ள இடங்​களில் பாஜக கூட்​ட​ணிக்கு ஏழு அல்​லது எட்டு இடங்​கள் கிடைக்​கும் என மதிப்​பிடப்​படு​கிறது. எட்​டாவது இடத்துக்கு போட்​டி கடுமை​யாக இருக்​கும்​ என கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT