தேஜஸ்வி யாதவ்

 
இந்தியா

பிஹார் மாநிலங்களவை தேர்தல் தோல்வி: காங். மீது ஆர்ஜேடி அதிருப்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் காலி​யாக இருந்த மாநிலங்​களவை இடங்களுக்​கான தேர்​தலில், ஆளும் என்​டிஏ கூட்​ட​ணி​யைச் சேர்ந்த நிதிஷ் குமார், ராம்​நாத் தாக்​கூர், நிதின் நவீன் மற்​றும் பாஜக​வின் சிவம் குமார் ஆகியோர் சட்​டப்​பேரவை பலத்​தின் அடிப்​படை​யில் எளி​தாக வெற்றி பெற்​றனர்.

ஆனால், ஐந்​தாவது இடத்​துக்கு என்​டிஏ கூட்​டணி ஆதர​வுடன் ராஷ்டிரிய லோக் மஞ்ச் தலை​வர் உபேந்​திர குஷ்​வாஹா​வும், ஆர்ஜேடி சார்​பில் ஏ.டி.சிங்​கும் போட்​டி​யிட்​டனர். இதில், குஷ்​வாஹா வெற்​றி​பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டார்.

          

காங்​கிரஸ் புறக்​கணிப்பு: வெற்​றிக்கு தேவை​யான 41 வாக்குகளைப் பெற 35 எம்​எல்​ஏக்​களைக் கொண்ட மகாபந்​தன் கூட்​ட​ணி, ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் ஆதரவை கடும் முயற்​சி​யால் தேஜஸ்வி யாதவ் தக்​க​வைத்​தார்.

இருப்​பினும், கடைசி நேரத்​தில் காங்​கிரஸைச் சேர்ந்த மனோஜ் பிஸ்​வாஸ், மனோகர் பிர​சாத் சிங், சுரேந்​திர குஷ்​வாஹா ஆகிய மூன்று எம்​எல்​ஏக்​கள் வாக்​கெடுப்​பில் கலந்​து​கொள்​வில்​லை. அதேபோல் ஆர்​ஜேடியை சேர்ந்த பைசல் ரஹ்​மானும் வாக்கெடுப்பில் பங்​கேற்​காமல் மாய​மா​னார். இதனால் மகாபந்தன் வேட்​பாளர் ஏ.டி.சிங் தோல்​வியைத் தழு​வி​னார்.

இதனால், ஆர்​ஜேடி கட்​சி​யினர் காங்​கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்​துள்​ளனர். இதனால் பிஹார் அரசி​யலில் மகாபந்​தன் கூட்ட​ணி​யின் எதிர்​காலம்​ கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT