இந்தியா

இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய பாரத் ஜோடோ யாத்திரை: காங்கிரஸ் கட்சி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் ‘எக்​ஸ்' தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்​கொண்ட பாரத் ஜோடோ யாத்​திரை நகரில் மூன்று ஆண்​டு​களுக்கு முன் நிறைவடைந்​தது. 4,000 கி.மீ. தூர நடைப்​பயணத்தை ராகுல் காந்​தி​யும், 200-க்​கும் மேற்​பட்ட தொண்​டர்​களும் மேற்​கொண்​டனர். இது 145 நாட்​களுக்​கும் மேலாக நீடித்​தது.

          

12 மாநிலங்​கள் மற்​றும் 2 யூனியன் பிரதேசங்​களை கடந்து சென்​றது. பொருளா​தார ஏற்​றத்​தாழ்​வு​கள் அதி​கரித்​தல், சமூகப் பிளவு ஆழமடைதல், அரசி​யல் சர்​வா​தி​காரம் பெரு​குதல் ஆகிய மூன்று செய்​தி​களை மக்​களிடம் கொண்டு சென்ற இந்த யாத்​திரை, நமது நாட்​டின் அரசி​யலில் பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தும் நிகழ்​வாகும். இது வரும் தசாப்​தங்​களுக்கு நினை​வு​கூரப்​படும்.இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT