இந்தியா

ஆகஸ்ட் 1 முதல் திருமலை கோயில் குளத்தில் நீராடத் தடை

செய்திப்பிரிவு

திருமலை: திருமலையில் ஏழுமலையான் கோயிலின் வடக்கே மிகவும் புனிதமாக கருதப்படும் சுவாமி புஷ்கரணி எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் (சுவாமி புஷ்கரணி) ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம், அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளன. இதனையொட்டி, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோயில் குளத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை குளத்தில் மீண்டும் தூய்மையான தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறும். எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT