கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொய்த்த பருவமழை

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொய்த்த பருவமழை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் மே மாதம் இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

ஆனால் நிகழாண்டில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அங்கு மழை பெய்யவில்லை. ஜூலை முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை 4 நாட்கள் மட்டுமே நீடித்த‌து. இதே போல கபிலா நதி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை.

தமிழகத்துக்கு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதிக்குள் 28.3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 3.4 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொய்த்த பருவமழை
நீதிமன்ற விசாரணையை வீடியோ எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in