இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது விசாரணையில் அம்பலம்

செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் பக்​தர்​களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்​கொடை வசூலித்​தது எஸ்​ஐடி விசா​ரணை​யில் தெரியவந்​துள்​ளது.

அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருடப்​பட்​ட​தாக​வும் நன்கொடை வசூலித்​த​தில் முறை​கேடு நடந்​த​தாக​வும் புகார் எழுந்துள்​ளது. இதுகுறித்து விசா​ரிக்க சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில், அறக்​கட்​டளை​யின் முன்​னாள் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் நெருங்​கிய உதவி​யாள​ரான ராம்​ஷங்​கர் யாதவ் (என்ற தின்னு யாதவ்) என்​பவரும் அடங்​கு​வார். இந்த சர்ச்சை வெடித்ததை அடுத்​து, சம்​பத் ராய் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்​தார்.

இந்​நிலை​யில் விசா​ரணை​யின்​ போது, போலி​யாக தயாரிக்​கப்​பட்ட நன்​கொடை ரசீதுகளை வழங்கி பக்தர்​களிட​ம் இருந்து பணம் வசூலித்​ததை குற்​றம் சாட்டப்பட்டவர்​கள் ஒப்​புக்​கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

மீட்​கப்​பட்ட ரசீது புத்​தகங்​கள் அசல் ரசீதுகளைப் போன்றே அச்சு அசலாக இருந்​த​தாக ஆதா​ரங்​கள் தெரிவிக்​கின்​றன. அந்​தப் போலி ரசீதுகளில் அறக்​கட்​டளை​யின் முத்​திரை​யும் இருந்​த​தால், அவை உண்​மை​யானவை போலவே தோற்​றமளித்​தன. இதனால் பக்​தர்​கள் எவ்​வித மோசடியை​யும் சந்​தேகிக்​க​வில்​லை.

ஆரம்​பத்​தில், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் இந்த போலி ரசீதுகளைப் பயன்​படுத்தி நன்​கொடை பெற்​றுக் ​கொண்​ட​தாக ஆதா​ரங்​கள் கூறுகின்​றன. இது​போன்ற போலி ரசீதுகளை வழங்கி எவ்​வளவு பணம் முறை​கேடு செய்​துள்​ளனர் என்​பதை எஸ்​ஐடி இன்​னும் முழு​மை​யாகக் கண்​டறிய​வில்​லை. இருப்​பினும், ராமர் கோயில் நிர்​வாகம் புதிய ஆன்​லைன் ரசீது முறையை அறிமுகப்​படுத்​திய பிறகு, குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் இந்த காகித ரசீதுகளைப் பயன்​படுத்​து​வதை நிறுத்​தினர்.

அதன் பின்​னர் பக்​தர்​கள் தங்​களின் நன்​கொடைகளை நேரடியாக கோயி​லின் வங்​கிக் கணக்​குக்கு மாற்​றத் தொடங்கினர் அல்​லது கோயில் வளாகத்​துக்​குள் இருக்​கும் அங்கீகரிக்​கப்​பட்ட நன்​கொடை கவுன்ட்​டரிலிருந்து ரசீதுகளைப் பெற்​றனர்.

இதற்​கிடை​யில், நன்​கொடை, காணிக்கை பணத்தை எண்​ணும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த 6 ஊழியர்​கள், காலப்​ போக்​கில் சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்​த​து எஸ்​ஐடி விசா​ரணை​யில் தெரிய ​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT