இந்தியா

ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஆஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அக்​ரம் (50) என்ற நபர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வர் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து தகல​வறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஆஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தில் சாஜித் அக்​ரம் என்​பவர் ஹைத​ராபாத்​தின் டோலிசவ்கி நகரத்தை பூர்​வீக​மாக கொண்​ட​வர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசா​வில் அவர் ஆஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​விட்​டார்.

இதையடுத்து அவருடைய குடும்​பத்​தினருட​னான தொடர்பு குறை​வாகவே இருந்​துள்​ளது. இரண்டு அல்​லது மூன்று முறை மட்​டுமே இந்​தியா வந்​துள்​ளார். இவர், இறு​தி​யாக கடந்த 2022-ம் ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு வந்​துள்​ளார்.

இவரது தந்தை கடந்த 2017-ம் ஆண்​டில் இறந்​த​போது​கூட இறுதி காரி​யங்​களை செய்​ய​வதற்​காக சாஜித் அக்​ரம் இந்​தி​யா​வுக்கு வரவில்​லை. ஆனால், சாஜித் அக்​ரமின் மகன் நவீது கடந்த 2001-ல் ஆஸ்​திரேலி​யா​வில் பிறந்​தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை வழங்​கப்​பட்​டு உள்​ளது. சாஜித் அக்​ரம் ஹைத​ரா​பாத்​தில் வணி​க​வியலில் இளங்​கலை பட்​டப்​படிப்பை முடித்​தவர். ஆஸ்​திரேலி​யா​வுக்கு இடம்​பெயர்ந்த பின்​னர் அவர் ஐரோப்​பிய பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். அவரிடம் இன்​னும் இந்​திய பாஸ்​போர்ட் உள்​ளது.

சாஜித் மற்​றும் அவரது மகன் நவீது ஆகியோர் தீவிர​வாத செயலில் ஈடு​பட்​டதற்​கும், இந்​தி​யா​வுக்​கும் எந்​த​வித​மான தொடர்​பும் கிடை​யாது. இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​விக்​கின்​றன.

SCROLL FOR NEXT