இந்தியா

அசாம் முதல்வர் மனைவியிடம் 3 நாடுகளின் பாஸ்போர்ட்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் ஊடக மற்​றும் விளம்​பரப் பிரிவுத் தலை​வர் பவன் கெரா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா​வின் மனைவி ரினிகி ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), எகிப்​து, ஆன்​டிகுவா ஆகிய 3 நாடு​களின் பாஸ்​போர்ட்​களை வைத்​திருக்​கிறார். அத்​துடன் ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் அமெரிக்​கா​வில் அவர் சில தொழில்​களை நடத்தி வரு​வதுடன் சொத்​துகளை வைத்​துள்​ளார்.

இது பற்றி எல்​லாம் சர்மா தனது தேர்​தல் பிர​மாணப் பத்​திரத்​தில் குறிப்​பிடவில்​லை. இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் விசா​ரணை நடத்த வேண்​டும். மேலும் ரினிகி இந்​திய பாஸ்​போர்ட் வைத்​துள்​ளாரா மற்​றும் அவரது குடி​யுரிமை என்ன என்​பதை அரசு உறு​திப்​படுத்த வேண்​டும். மேலும், சர்​மாவைக் கைது செய்ய வேண்​டும். தேர்​தலில் போட்​டி​யிட அவருக்​குத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

          

இதுகுறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்​போது, “பவன் கேரா என் மீது கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் தீய எண்​ணம் கொண்ட, புனையப்​பட்ட மற்​றும் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்ட பொய்​கள். அசாம் மக்​களைத் தவறாக வழிநடத்​தும் நோக்​கம் கொண்​ட​வை. எனவே அவர் மீது நானும் என் மனை​வி​யும் அடுத்த 48 மணி நேரத்​தில் குற்ற மற்​றும் அவதூறு வழக்​கு தொடுக்​க உள்​ளோம்​" என்​றார்​.

SCROLL FOR NEXT