ரினிகி சர்மா |கோப்புப் படம்

 
இந்தியா

கவுரவ் கோகாய் மனைவிக்கு பாகிஸ்தானில் வங்கி கணக்கு: அசாம் முதல்வர் மனைவி புகார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அசாம் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் மனைவிக்கு பாகிஸ்தான் வங்கி கணக்கும் உள்ளது பற்றி தெரிவிக்க முடியுமா? என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாவின் மனைவி ரினிகி சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி சர்மாவிடம் 3 நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உள்ளதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரோ நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

          

இந்நிலையில் இதற்கு நேற்று பதில் அளித்த ரினிகி சர்மா கூறியதாவது: என்னிடம் 3 நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உள்ளதாக எதிர்க்கட்சியின் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. எனது குடும்பத்தினர் யாரும் வெளிநாடுகளில் தொழில் செய்யவில்லை. எங்களுக்கு வெளிநாட்டில் சொத்துகளும் இல்லை. காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தான் வங்கி கணக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அத்தகவலை நீங்கள் பொதுவில் வெளியிட முடியுமா? இவ்வாறு ரினிகி சர்மா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT