இந்தியா

கேஜ்ரிவால் வசித்த ‘ஷீஷ் மஹால்’ பங்களா அடுத்த வாரம் பொதுமக்களின் பார்வைக்குத் திறப்பு

டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்விந்த் கேஜ்ரிவால் வசித்து வந்த, பாஜக​வால் ‘ஷீஷ் மஹால்’ (கண்​ணாடி மாளி​கை) என விமர்​சிக்​கப்​பட்ட சர்ச்​சைக்​குரிய அரசு பங்​களா, அடுத்த வாரம் முதல் பொது​மக்​கள் பார்​வைக்​காக திறக்​கப்பட உள்​ள​து.

டெல்​லி​யில் அர்​விந்த் கேஜ்ரி​வால் முதல்​வ​ராக பதவி வகித்​த​போது அவர் தங்​கு​வதற்​காக சிவில் லைன்ஸ் பகு​தி​யில் உள்ள 6, பிளாக்​ஸ்​டாஃப் சாலை​யில் ஷீஷ் மஹால் புதுப்பிக்​கப்​பட்​டது. இந்த பங்களா​வில், 2024-ம் ஆண்டு வரை அர்​விந்த் கேஜ்ரி​வால் வசித்து வந்​தார்.

2025 டெல்லி சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கேஜ்ரி​வால் ஆட்சிக் காலத்​தில் இந்த பங்​களா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட ஆடம்பரப் புதுப்​பிப்​புப் பணி​களை முக்​கி​யத் தேர்​தல் பிரச்சாரமாக பாஜக முன்​னெடுத்​தது. இதனால், சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது புதுடெல்லி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அர்​விந்த் கேஜ்ரி​வாலை பர்வேஷ் வர்மா தோற்​கடித்​தார்.

இதுகுறித்து பர்​வேஷ் வர்மா செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது: ஷீஷ் மஹால் பொது​மக்​களுக்​காகத் திறக்​கப்பட உள்​ளது. அடுத்த வாரம் முதல் டெல்லி மக்​கள் இதைப் பார்வையிடலாம். இதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நடை​முறை​கள், நுழைவுக் கட்​ட​ணம் மற்​றும் பார்​வை​யிடும் நேரங்​கள் குறித்த விவரங்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும்.

அதற்கு முன்​ன​தாக, அடுத்த 2 அல்​லது 3 நாட்​களில் பத்​திரி​கை​யாளர்​களுக்கு பங்களாவைச் சுற்​றிக் காட்ட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது, அதற்கான விவரங்​கள் புதன்​கிழமை (இன்​று) அறிவிக்​கப்​படும். இவ்​வாறு பர்​வேஷ் கூறி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT