பாலியல் வன்கொடுமை முதல் வழக்கில் ஜெம் வீரமணி உள்பட 3 பேருக்கு எதிராக நவ.20-ல் குற்றச்சாட்டு பதிவு

பாலியல் வன்கொடுமை முதல் வழக்கில் ஜெம் வீரமணி உள்பட 3 பேருக்கு எதிராக நவ.20-ல் குற்றச்சாட்டு பதிவு
Updated on: 
1 min read

சென்னை: ‘சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட முதல் வழக்கில் ஜெம் வீரமணி மற்றும் அவரது கார் ஓட்டுநர்களான பாபு, பார்த்திபன் ஆகியோருக்கு எதிராக நவ.20-ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்’ என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலதிபர் ஜெம் வீரமணிக்கு எதிராக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், வீரமணியின் கார் ஓட்டுநர்களான பாபு, பார்த்திபன், பெருமாள் என்ற பாலா, லாசர், முன்னாள் உதவியாளர் கணேசன், உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரகாஷ் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் முதல் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரமணி மற்றும் அவரது கார் ஓட்டுநர்களான பாபு, பார்த்திபன் ஆகியோருக்கு எதிராக 720 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்டார்.

அவற்றை அவர்கள் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த வழக்கில் நவ.20-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை முதல் வழக்கில் ஜெம் வீரமணி உள்பட 3 பேருக்கு எதிராக நவ.20-ல் குற்றச்சாட்டு பதிவு
100 ஆம்புலன்ஸ்களை கொள்முதல் செய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் விஜய் உத்தரவு

X