மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் நடுவழியிலேயே தடுத்து நிறுத்தினர். படம்: பிடிஐ

 
இந்தியா

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லம் நோக்கி அர்விந்த் கேஜ்ரிவால் பேரணி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எத்​த​னால் கலந்த இ20 பெட்​ரோலுக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, பிரதமர் இல்​லம் நோக்கி ஆம் ஆத்மி கட்​சி​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் தலை​மை​யில் கட்​சித் தொண்​டர்​கள் நேற்று பேரணி நடத்​தினர்.

பெட்​ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்​த​னால் கலந்து இ20 என விற்​பனை செய்​வதைத் தடுக்க வேண்​டும் என்று கோரி டெல்​லி​யில் நேற்று பிரதமர் மோடி​யின் இல்​லம் நோக்கி ஆம் ஆத்​மி​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால், டெல்லி முன்​னாள் துணை முதல்​வர் மனீஷ் சிசோடி​யா, கட்​சி​யின் பிற தலை​வர்​கள், தொண்​டர்​கள் இணைந்து பேரணி​யாகச் சென்​ற​னர்.

அப்​போது நடு​வழி​யில் அவர்​களைப் போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதையடுத்து அவர்​கள் சாலை​யோரம் அமர்ந்து தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அர்​விந்த் கேஜ்ரி​வால் கூறிய​தாவது: இ20 பெட்​ரோல் விவ​காரத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் தலை​யீடு உள்​ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பின் நெருக்​கடிக்​குப் பயந்து பிரதமர் மோடி செயல்பட கூடாது என்று நான் கூறிக் கொள்ள விரும்​பு​கிறேன். அமெரிக்​கா​விடம் இருந்து எத்​த​னால் வாங்​கு​வது நிறுத்​தப்பட வேண்​டும். நம்​முடைய நாட்​டில், எத்​த​னால் கலப்பு பெட்​ரோல் திணிப்பை நிறுத்​து​வதற்​கான ஏற்​பாடு​களைப் பிரதமர் மோடி செய்ய வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் பிரதமர் மோடி எங்​களை அழைத்து பேசு​வார் என நம்​பு​கிறேன். அவரைச் சந்​திக்க வேண்​டும் என்று நாங்​கள் தகவல் அனுப்பி இருக்​கி​றோம். அது​வரை எங்​கள் போராட்​டம் தொடரும். இ20 பெட்​ரோல் பயன்​படுத்​து​வ​தால் பல பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன. இதுதொடர்​பாக கோடிக்​கணக்​கான வாகன உரிமை​யாளர்​கள் கவலை தெரி​வித்து வரு​கின்​ற​னர்.

இ20 பெட்​ரோலை பயன்​படுத்​து​வ​தால் பிரச்​சினை வரு​கிறது என்று பொது​மக்​கள் கூறிய போதும், அந்த பெட்​ரோலைப் பயன்​படுத்த வேண்​டும் என்று மத்​திய அரசு கூறு​வது ஏன்? சாதாரண பெட்​ரோல் அல்​லது இ20 பெட்​ரோல் இவற்​றில் எதை வாங்​கு​வது என்​ப​தற்​கான வாய்ப்​பைப் பெட்​ரோல் நிலை​யங்​களில் நுகர்​வோருக்கு வழங்க வேண்​டும். இதைத்​தான் நாங்​கள் கேட்​கி​றோம். மேலும், இ20 பெட்​ரோல் விலை​யைக் குறைக்க வேண்​டும். இவ்​வாறு கேஜ்ரி​வால் கூறி​னார்​.

SCROLL FOR NEXT