இந்தியா

யூடியூபர் துருவ் ராத்திக்கு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட்: டெல்லி நீதிமன்றம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2018-ல் தொடரப்​பட்ட கிரி​மினல் அவதூறு வழக்​கில், யூடியூபர் துருவ் ராத்​திக்கு எதிராக டெல்லி சாகேத் நீதி​மன்​றம் நேற்று ஜாமீனில் வெளிவர முடி​யாத பிடிவாரண்ட் பிறப்​பித்​தது.

‘ஐ சப்​போர்ட் நரேந்​திர மோடி’ முகநூல் பக்​கத்​தின் நிறு​வனர் விகாஸ் பாண்டே, ‘பாஜக ஐடி செல் பாகம் 2’ என்ற வீடியோவில் துருவ் ராத்தி தன் மீது அவதூறு பரப்​பிய​தாக வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். ராத்​திக்கு அனுப்​பப்​பட்ட சம்​மன் மற்​றும் வாரண்​டுகளுக்கு அவர் ஆஜராகாததால், நீதித்​துறை நடுவர் அனாம் ரயீஸ் கான் பிடிவாரண்ட் உத்​தரவைப் பிறப்​பித்​தார். வழக்​கின் அடுத்த விசா​ரணை டிசம்​பர் 3-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டது.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி’ நடத்​திய போராட்​டத்​தில் பங்​கேற்க துருவ் ராத்தி அக்​டோபரில் இந்​தியா வந்​தார்.

அக்​டோபர் 8-ல் பெங்​களூரு போராட்​டத்​தில் பங்​கேற்ற அவர், டெல்லி ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​துக்கு முன்​பாக அக்​டோபர் 10-ல் குரு​கிராம் வீட்​டில் டெல்லி காவல் துறை​யால் காவலில் எடுக்​கப்​பட்டு, அக்​டோபர் 11-ம் தேதி அதி​காலை விடுவிக்​கப்​பட்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT