இந்தியா

ரூ.52,000 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முப்​படைகள் தங்​களுக்கு தேவை​யான தளவாடங்களை வாங்​கு​வது பற்றி பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலிடம் விருப்​பம் தெரி​விக்கும். இதற்கு முதல்​கட்​ட​மாக பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்​புதல் அளிக்​கும். இதற்கு இறுதி ஒப்​புதல் பெறப்​பட்​டபின் இந்த தளவாடங்​களை வாங்​கு​வதற்கு தேவை​யான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும்.

தரைப்படை பயன்​பாட்​டுக்​காக ட்ரோன்​களை தாக்கி அழிக்​கும் ஆகாஷ் தரங் என்ற ஆயுதம், டேங்க்​கு​களை தாக்கி அழிக்​கக் கூடிய இலகு ரக ஏவு​கணை​கள், தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும் நடுத்தர ரக ஏவு​கணை​கள், குறுகிய தூர வான் பாதுகாப்பு ஆயுதம், டேங்க்​கு​களுக்​கான பாது​காப்பு கருவி​கள், ஒரு முறை மட்​டும் பயன்​படுத்​தும் காமி​காஸ் ட்ரோன் ஆகியவை தேவை என விருப்​பம் தெரிவிக்​கப்​பட்​டது.

கடற்​படை பயன்​பாட்​டுக்​காக கண்ணி வெடிகள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவும் டரோன்​கள், எலக்ட்​ரிக் உந்து விசை கருவி​களுக்​கான பரிசோதனை மையம் ஆகியவை தேவை என விருப்​பம் தெரிவிக்​கப்​பட்​டது. விமானப்​படை பயன்​பாட்டுக்காக எப்​டபிள்யூ -எச்​ஏபிஎஸ் கண்​காணிப்பு கருவி தேவை என விருப்​பம் தெரிவிக்​கப்​பட்​டது. இந்த தளவாடங்​களை ரூ.52,000 கோடிக்கு வாங்க பாது​காப்பு கொள்​முதல்​ கவுன்​சில்​ ஒப்​புதல்​ அளித்​துள்ளது.

SCROLL FOR NEXT