இந்தியா

அமெரிக்கா - ஈரான் போரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இதன் மூலம் அமெரிக்கா - ஈரான் போரில் வளை​கு​டா​வில் உயி​ரிழந்த இந்​தி​யர் எண்​ணிக்கை 6 ஆக உயர்ந்​துள்​ளது.

இது தொடர்​பாக வெளி​யுறவு அமைச்சக கூடு​தல் செய​லா​ளர் (வளை​கு​டா) அசீம் மகாஜன் நேற்று டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

          

மேற்கு ஆசிய போரில் சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் கடந்த 18-ம் தேதி இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இது வியாழக்​கிழமை நள்​ளிரவு உறுதி செய்​யப்​பட்​டது. மேற்கு ஆசிய போரில் இது​வரை 6 இந்​தி​யர்​கள் இறந்​துள்​ளனர். ஒரு​வரை காண​வில்​லை. இந்​தி​யர் காணா​மல்​போனது தொடர்​பாக​வும் இறந்​தவர்​களின் உடல்​களை இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்பி வைப்​பது தொடர்​பாக​வும் சவுதி அரேபி​யா, ஓமன், இராக் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இந்​திய தூதரகங்​கள் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களு​டன் தொடர்​பில் இருந்து வரு​கின்​றனர்.

இராக்​கில் எம்​.டி. சேஃப்சீ எண்​ணெய் கப்​பலில் இருந்து மீட்​கப்​பட்ட 15 இந்​திய ஊழியர்​கள் சவுதி அரேபியா வழி​யாக இந்​தியா வரு​கின்​றனர். ஏற்​கெனவே இரு கப்​பல்​களில் இருந்து மீட்​கப்​பட்ட 25 இந்​திய ஊழியர்​கள் ஓமன் வழி​யாக இந்​தியா திரும்பி விட்​டனர். வளை​குடா பிராந்​தி​யத்​தில் இருந்து கடந்த பிப்​ர​வரி 28 முதல் சுமார் 3 லட்​சம் பயணி​கள் இந்​தியா திரும்​பி​யுள்​ளனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT