அமராவதி: செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிர் பிழைத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம், அல்லூரி மாவட்டம், அனந்தகிரி மண்டலம், லுங்கபர்த்தி கிராமத்தை சேர்ந்த திரிஷா (17), ரத்னகுமாரி (16), பவித்ரா (16) மற்றும் ஒரு தோழி என மொத்தம் 4 பேரும் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தற்போது விடுமுறை என்பதால், 4 பேரும் நேற்று நீச்சல் பழக அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்றனர்.
குளிப்பதற்கு முன் சற்று நீரில் இறங்கி செல்ஃபி எடுத்தனர். அப்போது அனைவரும் நீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் ஒரு பெண் மட்டும் உயிர் தப்பினார். மற்ற மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அனந்தகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.